Saturday, October 8, 2011

இந்த வார சில்பான்ஸோ-V


1.தேநீரா இருந்தா என்ன? போதை நீரா இருந்தா என்ன? அந்த கோப்பை என்னுடையது. வாழ்க்கை...

2.ஓவர் நைட்ல உலகம் அடிக்கிற பாதி ரவுண்டுக்கு கொஞ்சம் ஷேக் ஆனா என்னாகும். #போதையில் வாயில் வாசித்தது....

3.மரணம் : தூக்கம் செத்தவனுக்கு, துக்கம் பார்க்க வந்தவனுக்கு... 

4.நல்லவன் செத்தா ஏழுக்கு மூனு....கெட்டவன் செத்தா சேம் சைஸ்ல ரோட்டு முக்குல சிலை. # சோ பிரைட் இந்தியா.

5.போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் துற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே! #அமுக்குடா புறம்போக்கு நிலத்த...


காதல் செய்த பாவம் - II



1.எத்தனை முறை அடி வாங்கினாலும், இந்த இதயம் மட்டும் கேட்பதில்லை

2.ஒலிஒளியுமில்ல வரிவடிவம் காதல் கணங்கள்

3.விளையாட்டை தொடங்குவது காதல், முடிப்பது காதலர்கள்...

4.காதல் கனவு. மழைக்கால மண்குதிரை ஊர்கோலம்.... 

5.ஒவ்வொருமுறையும் தோல்வியடையும்போது காதல் உயிர் பெற்றுவிடுகிறது. காதலர்கள் உறங்கிவிடுகிறார்கள் நிரந்தரமாக...


காதல் என்றால் என்ன?


மிகச் சிறிய சொல்
பிரம்மாண்டமான சக்தி …
அனேக மொழியில் அளவு சிரியதே
அர்த்தங்கள் அளக்க அடங்கா பெருங்கடல்....
அட கண்ணில் தொடங்கியதா?
கண்ணீரில் தொடங்கியதா?
காமத்தில தொடங்கியதா ?
யாரரிவார் இதன் படைப்பை!
அறிந்தவனை அனுப்பிவை
நான் கேட்கிறேன் ஒரு கேள்வியைய் . . . 






"காதல் என்றால் என்ன?"வென்று.

Tuesday, September 13, 2011

பாதை




எனக்கான இடத்தை தேட தொடங்கியபோது அதே புள்ளியில் என் பயனமும் தொடங்கிற்று. கடந்தவந்த பயனம் மிக நீண்ட தூரமாயினும் திரும்பி பார்க்கையில், பாதையின் நேர்கோடு சிறு புள்ளியாகவே தோற்றமளிக்கின்றது.நீண்டதொரு பாதை வருத்ததையும், சில குறுகியபாதை மகிழ்ச்சியையும் அள்ளி தெளித்துவிட்டிறுகின்றது. மொத்த பயனமும் சிறு புள்ளியாக தேயும்முன் எனக்கான இடம் ஏழுக்கு மூனு புலப்பட்டுவிடும்.அதற்க்குமுன் நான் வந்த பாதை சிலருக்கு பாடமாகவும், பலருக்கு வாழ்வியலின் வழியாகவும் அமைக்கவேண்டியது என் கடமை.

ஆயில் வித் ஆப்பு ஆஸ்கார்...



இம்முறையும் தி.மு.கா ஆட்சிக்கு வந்திருந்தால், நிச்சயம் கோ, வானம், எங்கேயும் காதல் ஆகிய படங்கள் ஆஸ்காரின் இறுதி சுற்றுவரை முன்னேறி இறுதியாக மூன்று படங்களும் விருதினை பகிர்ந்திருக்கும். சிறந்த திரைகதைக்கு எழுத்தாளர் திரு.மு.கா அவர்களுக்கும், சிறந்த நடிகர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகருக்கான விருது அனைத்தும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடிவேலு அவர்களுக்கும், சிறந்த ந............டிகைக்கான விருது கு(குறில்)ஷ்புவுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது "கவிபேரரசு" வைரமுத்து அவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட படத்தின் கீழ் ஆஸ்கர் கிடைத்திருக்கும்.


குறிப்பு: மேல் மற்றும் கீழ் குறிப்பிட்ட எல்லாவற்றிலும் அரசியலோ, டபுள் மீனிங்கோ, உள்&வெளி குத்தோ, வாயு, கபம் ஏதும் இல்லை. "எல்லா புகழும் அம்மாவுக்கே".

Monday, September 12, 2011

 இந்த வார சில்பான்ஸோ-IV




1.முதலில் தாக்குபவன் இரண்டாவதாகச் சாவான்... டிக்கெட் கன்ஃபார்ம்.

2.தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும். கடவுளிடமில்லை, கூகுலிடம்...

3.சொந்த செலவில் சூன்யம், கோழிக்கு இரையாய் போட்ட சிக்கன் பிரியானி.

4.ஐம்புலன்கள அடக்குவதை விட, அடியில இருக்கற பூதத்த அடக்குவது மேல்.

5.சிங்கிள் டீக்கு ஆசைபட்டு சின்னபின்னமா அடிவாங்கறவன் தியாகியாகமாட்டான். 

6.பத்து போதனைகளை விட ஒத்த அடி சிறந்த பலனை தரும்.

7.சரக்கு போட்டா படுக்கற இடமெல்லாம் பஞ்சுமெத்தை.


காதல் செய்த பாவம் - I



1.ஆழமும் தெரியாத, அகலமும் தெரியாத கடல். காதல்...
2.கவிதை ஊற்றி வளர்த்த பூ, காதல்...
3.ஒவ்வொரு கவிதையும், காதலின் புது பிறப்பு....
4.என் குப்பைத்தொட்டி முழுவதும் கவிதை. காதல்...
5.இருவேறு துருவங்கள் மோதிக்கொள்ளும் இடம், காதல்...
6. காதலில் புதைந்த என் சொர்க்கம். காதல்...
7.காதல் புதைந்த கல்லறைத் தோட்டம், கவிதை காடு...
8.காதலி மாறலாம்..... காதல் மாறாது.
9.கடவுச் சொல்லில் புதைந்து காதல் வளர்கிறது....
10.காதல் எங்களை இணைத்தது..... 
11.காதல் ஒரு யுத்தம். தோற்றுப்போவது கோழைகளே...
12.காதலி - எனக்கு பிடித்த சர்வதிகாரி.... 
13.காதல் - விருப்பபட்டு ஏற்றுகொள்ளும் உயிகொல்லி நோய்...
14.காதல் இனிமையான வெறித்தனமும், கடுமையான மனநோயும் கொண்டது.... 
15.மறைக்கப்பட்ட அழகின்மீது தான் ஈர்ப்பு விசை மிக அதிகம்....
16.வேதனையில்லாமல் நீடிப்பது காதலில்லை...

###காதல் செய்த பாவம்###


Thursday, March 24, 2011

ரகசியம்





நாசி கடந்த கரியமில வாயு
பெரும் சத்ததுடன் பெரும்மூச்சாய்
மூக்கின்வழியே கடக்க

மனதின் மதிலோரம்
படிந்திருந்த நினைவுகளின் ஒட்டடைகளையும்
காற்றிலே தவனை முறையில் கறைக்குதே

காற்றிலே கலந்துவிட்ட
நினைவுகளை நூல்பிடித்து பறந்தாள்
புதைந்திருக்கும் ரகசியத்தின் கள்ளச்சாவி கிட்டும்

மீண்டும் பெரும்மூச்சு கலக்கும் பிரிதொருநாளில்
மெதுவாய் திற கள்ளச்சாவியுடன்
புதைந்திருக்கும் பெரும் ரகசியத்தை

உடைந்த இதயத்தின் சத்தம்
தவனைமுறையில் கேட்கும்
சத்தமில்லாமல்.

Monday, March 21, 2011

இந்த வார சில்பான்ஸோ-III




1.வேர் பரப்பி வளராத மரமும், கற்றதை கற்றுகொடுக்காத நபரும்...ம்ம்ம் என்ன சொல்ல?


2.ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு. படிக்கட்டு ஏறிக்கொண்டேயிருந்தாள் வெற்றியென்னும் சிகரத்தை சீண்டிகூட பார்க்க முடியாது.


3.கசக்காத வேம்பு, சந்தேகிகாத பெண்னு இல்லவே இல்ல.சத்தியமா.


4.களை எடுக்காதா காடும், கத்துக்காத பாடும் உருப்படியானதே இல்ல....


5.வாய்வரை வந்தது வாந்தியா இருந்தாலும் சரி, வார்த்தையா இருந்தாலும் சரி, ஸ்டாப் பன்னாவோ, ஸ்டார்ட் பன்னாவோ யாருக்கும் நல்லதல்ல....


6.அதிக சிக்ஸர் அடிச்ச பெளலரும், அதிக விக்கெட் எடுத்த பேட்ஸ்மேனும் சிறந்த கிரிக்கெட்டரா வந்ததேயில்ல.... 



Tuesday, March 15, 2011

இந்த வார சில்பான்ஸோ-II




1.காக்கைக்கு Fair & Lovely போடுறவன கூட நம்பு, புறாவுக்கு மணி கட்டுறவனா நம்பவே நம்பாத....

2.வத வதன்னு புள்ளகுட்டிய பெத்தா வீட்டுக்கு கேடு, நிறைய மரத்த வெட்டினா நாட்டுக்கு கேடு...

3.குவாட்டருக்கே ஆப்பாயில் போடுறவன், கோடி கோடியா சம்பாரிச்சாலும் "NO USE"...

4.பன்ச் டையலாக் பேசினவனும்,பாடிய மெய்ண்டெயின் செஞ்சவனும் ரியல் டைம் ஹீரோ ஆகவேமுடியாது...

5.கடல்ல போட்ட salt-ம், பிகருக்கு கொடுத்த gift-ம்....ஒன்னு...

6.மீட்டர் போட்ட ஆட்டோவும், பீட்டர் விட்ட பிகரும் நேர்வழில போனதே இல்ல...

7.என்.ஹ்ச் ரோட்ல மாட்டின நாயும், லவ்வுல மாட்டின பாயும் நிம்மதியா வெளியே வந்ததா சரித்தரமே இல்ல...

8.கல்யானத்துக்கு கட்டவுட் வெச்சாலும், கருமாதிக்கு பிட் நோட்டிஸ் கொடுத்தாலும் போன வாழ்க்கை திரும்ப வரபோவதில்லை...

9.காசு இருந்தா ஸ்காட்ச குடி...இல்லைன்னா கயிச்சு குடி...

Wednesday, March 9, 2011

நெருப்பு



ஆழமான நேசத்திற்க்கும், அன்புக்கும்மான நேர்ரெதிர் திசையில் இருக்கும் காமத்திற்க்கும், குரூரத்திற்க்கும் மத்தியில் காதல் தகித்துக் கொண்டேயிருக்கிறது. காதல் எந்த திசையில் சாயும்மென்பது இரண்டுக்குமான சமத்துவத்தில் புதைந்துள்ள கங்குகள்.


Thursday, March 3, 2011

இந்த வார சில்பான்ஸோ-I




1.அதிகாலை சன்ரைஸ் பார்த்தவனும், அர்த்தராத்திரியில் ஆப்பாயில் போட்டவனும் சிறந்த குடி(கார)மக-னாக இருக்கமுடியாது.

2.கண்ணாடி பார்க்க தெரியாதவனுக்கு, காதலிக்க தெரியாது.

3.அதிகமா லைக் போட்ட ஆம்பளையும், கொஞ்சமா காமெண்ட் போட்ட பொம்பளையும், FBல போஸ்ட் போட்டதா சரித்தரமே இல்ல......

4.காதல் வந்த மனசு பூவாவும், புத்தி புயலாவும் இருக்கும்.

5.கசாப்புகடைல அறுத்து தொங்கவிட்ட ஆட்டு தொடையா பார்த்து கொக்கரிச்சுதாம் கோழி.....

Wednesday, March 2, 2011

வடுக்கள்






மறக்க முடியாத முகங்களை

மறக்க துடிக்கும் போது

மறந்த போன நினைவுகள்

வாட்டி வதைக்கும் போது

வடுக்கள்கூட துளிர் விடும்

மீண்டும் வளர....

Tuesday, February 22, 2011

மற்றொரு நாள்

"மற்றொரு நாள்"


என் பகலெல்லாம் நிலவின்னொளி கவ்வ

அதிலே பிரகாசிக்கும் நட்சத்திரமெல்லாம் கண்சிமிட்ட....

இரவின் மழைசாரலில் நீண்டதொறு வானவில்லும்

எட்டாம் வண்ணம் இடையிலே சேர்ந்ததே....

விழித்திருந்த உறக்கம் உறங்கி விழித்தெளுந்தேன்

கனவு உறங்க சென்றது படிமத்தைவிட்டு....

மற்றொரு நாள் கனத்தமனதுடன் ஆரம்பம்

மீண்டும் எட்டாம் வண்ணம்தேடி நம்பிக்கையுடன்........