Thursday, March 24, 2011

ரகசியம்





நாசி கடந்த கரியமில வாயு
பெரும் சத்ததுடன் பெரும்மூச்சாய்
மூக்கின்வழியே கடக்க

மனதின் மதிலோரம்
படிந்திருந்த நினைவுகளின் ஒட்டடைகளையும்
காற்றிலே தவனை முறையில் கறைக்குதே

காற்றிலே கலந்துவிட்ட
நினைவுகளை நூல்பிடித்து பறந்தாள்
புதைந்திருக்கும் ரகசியத்தின் கள்ளச்சாவி கிட்டும்

மீண்டும் பெரும்மூச்சு கலக்கும் பிரிதொருநாளில்
மெதுவாய் திற கள்ளச்சாவியுடன்
புதைந்திருக்கும் பெரும் ரகசியத்தை

உடைந்த இதயத்தின் சத்தம்
தவனைமுறையில் கேட்கும்
சத்தமில்லாமல்.

Monday, March 21, 2011

இந்த வார சில்பான்ஸோ-III




1.வேர் பரப்பி வளராத மரமும், கற்றதை கற்றுகொடுக்காத நபரும்...ம்ம்ம் என்ன சொல்ல?


2.ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு. படிக்கட்டு ஏறிக்கொண்டேயிருந்தாள் வெற்றியென்னும் சிகரத்தை சீண்டிகூட பார்க்க முடியாது.


3.கசக்காத வேம்பு, சந்தேகிகாத பெண்னு இல்லவே இல்ல.சத்தியமா.


4.களை எடுக்காதா காடும், கத்துக்காத பாடும் உருப்படியானதே இல்ல....


5.வாய்வரை வந்தது வாந்தியா இருந்தாலும் சரி, வார்த்தையா இருந்தாலும் சரி, ஸ்டாப் பன்னாவோ, ஸ்டார்ட் பன்னாவோ யாருக்கும் நல்லதல்ல....


6.அதிக சிக்ஸர் அடிச்ச பெளலரும், அதிக விக்கெட் எடுத்த பேட்ஸ்மேனும் சிறந்த கிரிக்கெட்டரா வந்ததேயில்ல.... 



Tuesday, March 15, 2011

இந்த வார சில்பான்ஸோ-II




1.காக்கைக்கு Fair & Lovely போடுறவன கூட நம்பு, புறாவுக்கு மணி கட்டுறவனா நம்பவே நம்பாத....

2.வத வதன்னு புள்ளகுட்டிய பெத்தா வீட்டுக்கு கேடு, நிறைய மரத்த வெட்டினா நாட்டுக்கு கேடு...

3.குவாட்டருக்கே ஆப்பாயில் போடுறவன், கோடி கோடியா சம்பாரிச்சாலும் "NO USE"...

4.பன்ச் டையலாக் பேசினவனும்,பாடிய மெய்ண்டெயின் செஞ்சவனும் ரியல் டைம் ஹீரோ ஆகவேமுடியாது...

5.கடல்ல போட்ட salt-ம், பிகருக்கு கொடுத்த gift-ம்....ஒன்னு...

6.மீட்டர் போட்ட ஆட்டோவும், பீட்டர் விட்ட பிகரும் நேர்வழில போனதே இல்ல...

7.என்.ஹ்ச் ரோட்ல மாட்டின நாயும், லவ்வுல மாட்டின பாயும் நிம்மதியா வெளியே வந்ததா சரித்தரமே இல்ல...

8.கல்யானத்துக்கு கட்டவுட் வெச்சாலும், கருமாதிக்கு பிட் நோட்டிஸ் கொடுத்தாலும் போன வாழ்க்கை திரும்ப வரபோவதில்லை...

9.காசு இருந்தா ஸ்காட்ச குடி...இல்லைன்னா கயிச்சு குடி...

Wednesday, March 9, 2011

நெருப்பு



ஆழமான நேசத்திற்க்கும், அன்புக்கும்மான நேர்ரெதிர் திசையில் இருக்கும் காமத்திற்க்கும், குரூரத்திற்க்கும் மத்தியில் காதல் தகித்துக் கொண்டேயிருக்கிறது. காதல் எந்த திசையில் சாயும்மென்பது இரண்டுக்குமான சமத்துவத்தில் புதைந்துள்ள கங்குகள்.


Thursday, March 3, 2011

இந்த வார சில்பான்ஸோ-I




1.அதிகாலை சன்ரைஸ் பார்த்தவனும், அர்த்தராத்திரியில் ஆப்பாயில் போட்டவனும் சிறந்த குடி(கார)மக-னாக இருக்கமுடியாது.

2.கண்ணாடி பார்க்க தெரியாதவனுக்கு, காதலிக்க தெரியாது.

3.அதிகமா லைக் போட்ட ஆம்பளையும், கொஞ்சமா காமெண்ட் போட்ட பொம்பளையும், FBல போஸ்ட் போட்டதா சரித்தரமே இல்ல......

4.காதல் வந்த மனசு பூவாவும், புத்தி புயலாவும் இருக்கும்.

5.கசாப்புகடைல அறுத்து தொங்கவிட்ட ஆட்டு தொடையா பார்த்து கொக்கரிச்சுதாம் கோழி.....

Wednesday, March 2, 2011

வடுக்கள்






மறக்க முடியாத முகங்களை

மறக்க துடிக்கும் போது

மறந்த போன நினைவுகள்

வாட்டி வதைக்கும் போது

வடுக்கள்கூட துளிர் விடும்

மீண்டும் வளர....