Thursday, December 17, 2009

நான் ரசித்த ஹிச்காக்கின் சைகோ - Psycho (1960 film)


Psycho


             படம் வெளிவந்து வருடம் பல கடந்த பின்பும் அல்பிரேட் ஹிச்காக்கின்  "சைகோ" இன்னும் நினைவில் நிற்க காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள  மீண்டும் மீண்டும் மூன்று  முறை பார்த்து தெரிந்ததையும் இணையத்தில் தேடி  அறிந்ததையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

                ஜூன் 16 , 1960 ல் திரைக்குவந்த இப்படம் ராபர்ட் பலோச் என்பவரின் நாவலை தழுவியது.  கதை என்னவென்றால் , காதலன் சாம் லூமிசின் கரம் பற்ற மரியன் க்ரேன்  தான் வேலை செய்யும் அலுவலகத்தில்  $40 ,000 கையாடல் செய்துகொண்டு தனது காரில் போனிக்ஸ்லிருந்து கலிபோர்னியாவை  நோக்கி பயணிக்கிறாள். அசதியால் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அதனுள்ளே உறங்கிவிட்டாள். அதிகாலை சாலை போக்குவரத்து அதிகாரி என்னவென்று விசாரணை செய்தபொழுது எங்கே அகப்பட்டு கொள்வோமோ என்ற படபடப்புடன் பதில் கூறும் இடம் மிகவும் சிறப்பு. அதேபோல் காரை மாற்றும் இடத்திலும் அதற்கான விலைபேசும் இடத்திலும் சிறந்த நடிப்பு. மீண்டும் பயணத்தை தொடரும் மரியன் க்ரேன் இம்முறை மழையால் மாட்டிக்கொள்ள அதனால் சாலையோரம் இருக்கும் மோட்டலில்(பேட்ஸ்)   தங்குகிறார்.                 பேட்ஸ் மோட்டலின் உரிமையாளர், பாதுகாவலர் , வேலையால் அனைத்தும்  நோர்மன் என்பவர். மோட்டலின் பின்புறம் உள்ள ஒரு பாழடைந்த ஒரு வித தோற்றத்துடன் இருக்கும் வீட்டில்தான்   தங்கியுள்ளார் நோர்மன்.  மோட்டலின்  அறையில்  நோர்மனுகும், மரியன் க்ரேனுக்கும் நடக்கும் உரையடலும் பின்பு அவள் கொல்லப்படும் விதமும் மிகவும் தத்ருபமாக இருக்கும். யார்  கொலையாளி என்பதே படத்தின் சுவாரசியம். கொலையுண்டு மரியனையும்  அவள்  கொண்டுவந்த பொருட்களையும்  ($40 ,௦௦௦ த்தையும்) மூட்டையாக கட்டி அவள் கொண்டுவந்த கார்லியே கிடத்தி ஊரின் ஒதுக்குபுறமாக  இருக்கும் புதைகுழியில்  இரக்கும் வரை மிகவும் அருமை.


                   பிறகு  கொல்லப்பட்ட மரியன் கிரேனை தேடி அர்போகஸ்ட் என்னும் தனியார் புலனாய்வாளர் பேட்ஸ் மோட்டலுக்கு வருகிறார். நோர்மனுடன்  நடந்த உரையாடலில் அவனைப் பற்றியும் அவனுடைய தாயைப் பற்றியும் அறியவருகிறார் அர்போகஸ்ட். இதில் சற்று சந்தேகம் அடைத்த அர்போகஸ்ட் அவனுடைய தாயை காண அனுமதிகேட்டபோது மறுக்கிறான் நோர்மன். பின்பு நோர்மன்  மீது  இருக்கும் சந்தேகத்தை பற்றி தன்னைஅமர்த்திய மரியன் கிரேனின்  தங்கை  லிலவிடம் தொலைபேசில் விவரித்துவிட்டு மீண்டும் பேட்ஸ் மோட்டலின் பின்னிருக்கும் நோர்மன் தன் தாயுடன் தங்கிருக்கும் வீட்டிற்கு செல்கிறார் அர்போகஸ்ட்.  
                தனியார் புலனாய்வு அதிகாரி அர்போகஸ்ட்டும் கொல்லப்படுகிறார் அவ்
வீட்டிலியே . மரியனுக்கு நடந்தது போலவே அர்போகஸ்ட்டின் உடலும் காருடன் அதே புதைகுழியில் இரக்குகிறான் நோர்மன். அர்போகஸ்த்திடமிருந்து எந்தவொரு தகவலும் வராததால் லிலவும், சாம் லூமிசின்னும் அருகில் உள்ள காவல் துறையின் உதவியை நாடுகிறார்கள். அப்போதே நோர்மனின் தாயார் பத்து வருடங்களுக்கு முன்பே இறந்து போனது தெரிய வருகிறது. உண்மை நிலை அறிய லிலவும், சாம் லூமிசின்னும் அதே பேட்ஸ் மோட்டலுக்கு செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து கொலையாளியை கண்டுபிடிக்கும் விதம் மிகவும் அருமை. கொலையாளி யார் என்பதை நீங்களும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


                 இப்படத்தில்  ஒளிப்பதிவாளர் ஜான் எல்.ரஸ்ஸல்லின் உழைப்பு மிக அற்புதம். குளியறையில்  மரியன் க்ரேன் கொல்லப்படும் காட்சிமட்டும் கிட்டத்தட்ட 11 நாட்கள் படபிடிப்பு நடத்தபட்டதாம். வெறும் 45 வினாடிகளே அக்காட்சி படத்தில் இடம்பெறும். அதேபோல் இப்படத்தின் இயக்குனர் அல்பிரேட் ஹிச்காக்கும் ஒரு இடத்தில்  தோன்றி மறைவார். அது மரியன் தன் அலுவலகத்தை விட்டு $40 ,000  எடுத்துகொண்டு வெளிய வரும்பொழுது ஒரு வழிபோக்கனாக தோன்றுவர் அல்பிரேட் ஹிச்காக். மேலும் நோர்மானாக - அந்தோணி பெர்கின்சும் , சாம் லூமிசின்னாக - ஜான் கவின்னும்,  மரியன் க்ரேன்னாக - ஜானெட் லெயிக்கும், அர்போகஸ்ட்டாக - மார்டின் பால்சம்மும், லிலவாக - வெற மைல்சும் நடித்திருப்பார்கள். படத்தின் இசை பெர்னார்ட் ஹெர்மன்.