Tuesday, September 13, 2011

பாதை




எனக்கான இடத்தை தேட தொடங்கியபோது அதே புள்ளியில் என் பயனமும் தொடங்கிற்று. கடந்தவந்த பயனம் மிக நீண்ட தூரமாயினும் திரும்பி பார்க்கையில், பாதையின் நேர்கோடு சிறு புள்ளியாகவே தோற்றமளிக்கின்றது.நீண்டதொரு பாதை வருத்ததையும், சில குறுகியபாதை மகிழ்ச்சியையும் அள்ளி தெளித்துவிட்டிறுகின்றது. மொத்த பயனமும் சிறு புள்ளியாக தேயும்முன் எனக்கான இடம் ஏழுக்கு மூனு புலப்பட்டுவிடும்.அதற்க்குமுன் நான் வந்த பாதை சிலருக்கு பாடமாகவும், பலருக்கு வாழ்வியலின் வழியாகவும் அமைக்கவேண்டியது என் கடமை.

ஆயில் வித் ஆப்பு ஆஸ்கார்...



இம்முறையும் தி.மு.கா ஆட்சிக்கு வந்திருந்தால், நிச்சயம் கோ, வானம், எங்கேயும் காதல் ஆகிய படங்கள் ஆஸ்காரின் இறுதி சுற்றுவரை முன்னேறி இறுதியாக மூன்று படங்களும் விருதினை பகிர்ந்திருக்கும். சிறந்த திரைகதைக்கு எழுத்தாளர் திரு.மு.கா அவர்களுக்கும், சிறந்த நடிகர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகருக்கான விருது அனைத்தும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடிவேலு அவர்களுக்கும், சிறந்த ந............டிகைக்கான விருது கு(குறில்)ஷ்புவுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது "கவிபேரரசு" வைரமுத்து அவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட படத்தின் கீழ் ஆஸ்கர் கிடைத்திருக்கும்.


குறிப்பு: மேல் மற்றும் கீழ் குறிப்பிட்ட எல்லாவற்றிலும் அரசியலோ, டபுள் மீனிங்கோ, உள்&வெளி குத்தோ, வாயு, கபம் ஏதும் இல்லை. "எல்லா புகழும் அம்மாவுக்கே".

Monday, September 12, 2011

 இந்த வார சில்பான்ஸோ-IV




1.முதலில் தாக்குபவன் இரண்டாவதாகச் சாவான்... டிக்கெட் கன்ஃபார்ம்.

2.தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும். கடவுளிடமில்லை, கூகுலிடம்...

3.சொந்த செலவில் சூன்யம், கோழிக்கு இரையாய் போட்ட சிக்கன் பிரியானி.

4.ஐம்புலன்கள அடக்குவதை விட, அடியில இருக்கற பூதத்த அடக்குவது மேல்.

5.சிங்கிள் டீக்கு ஆசைபட்டு சின்னபின்னமா அடிவாங்கறவன் தியாகியாகமாட்டான். 

6.பத்து போதனைகளை விட ஒத்த அடி சிறந்த பலனை தரும்.

7.சரக்கு போட்டா படுக்கற இடமெல்லாம் பஞ்சுமெத்தை.


காதல் செய்த பாவம் - I



1.ஆழமும் தெரியாத, அகலமும் தெரியாத கடல். காதல்...
2.கவிதை ஊற்றி வளர்த்த பூ, காதல்...
3.ஒவ்வொரு கவிதையும், காதலின் புது பிறப்பு....
4.என் குப்பைத்தொட்டி முழுவதும் கவிதை. காதல்...
5.இருவேறு துருவங்கள் மோதிக்கொள்ளும் இடம், காதல்...
6. காதலில் புதைந்த என் சொர்க்கம். காதல்...
7.காதல் புதைந்த கல்லறைத் தோட்டம், கவிதை காடு...
8.காதலி மாறலாம்..... காதல் மாறாது.
9.கடவுச் சொல்லில் புதைந்து காதல் வளர்கிறது....
10.காதல் எங்களை இணைத்தது..... 
11.காதல் ஒரு யுத்தம். தோற்றுப்போவது கோழைகளே...
12.காதலி - எனக்கு பிடித்த சர்வதிகாரி.... 
13.காதல் - விருப்பபட்டு ஏற்றுகொள்ளும் உயிகொல்லி நோய்...
14.காதல் இனிமையான வெறித்தனமும், கடுமையான மனநோயும் கொண்டது.... 
15.மறைக்கப்பட்ட அழகின்மீது தான் ஈர்ப்பு விசை மிக அதிகம்....
16.வேதனையில்லாமல் நீடிப்பது காதலில்லை...

###காதல் செய்த பாவம்###