Thursday, October 22, 2009

தீபம்

தீபங்கள்  வரிசையாக சுடர் விட்டெறிவதை  பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான். என்ன இந்த தீபாவளிக்கு ஏற்றிய ஒற்றை விளக்கும் அழகாய் தான் இருந்தது.


மேலே உள்ள படம் எந்த பிற்தயாரிப்பும் இன்றி அப்படியா விதைக்கப்பட்டுள்ளது.

இனிதே ஆரம்பம்




சேலம் விமான நிலையத்தில் இதுவரை விமான சேவை இல்லாமல் இருந்து வந்தது.  வருகிற அக்டோபர் மாதம் முதல் விமான சேவை இனிதே துவங்குகிறது சேலம் விமான நிலையம். இதன் அதிகாரபுர்வ அறிவிப்பை Airports Authority of India (AAI) வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கிங்பிஷர் நிறுவனம் சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை தொடங்குகிறது. வருகிற 25ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. இதற்கான இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது.

முதல் விமான சேவை வரும் 25ம் தேதி சென்னையில் இருந்து  மதியம் 2.50 க்கு தொடங்கி ஒரு மணிநேர பயணமாக சேலம் வந்தடையும். மீண்டும் மாலை 4.20 சென்னையை நோக்கி தனது முதல் விமான சேவையை  சேலம் விமான நிலையம் தொடங்குகிறது.

சேலம் - சென்னை இடையிலான விமானக் கட்டணமாக ரூ. 2,877 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கட்டணத்தை குறைத்தால் கூடுதல் பயணிகளைக் கவர முடியும் என சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்முலம் ஆறு மாவட்டங்களாகிய தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

சில தகவல்




நீங்கள் ஆன்லைனில் புகைப்படங்களை வெளியிடும்போது, இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் அதைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். பெரும்பாலான நபர்கள் நேர்மையான காரணங்களுக்காகவே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இவற்றை தவறான நபர்களும் பயன்படுத்துகின்றனர் என்பதை நினைவில் கொள்ளவும்—ஏமாளிகள் கிடைப்பார்களா என்று தேடும் ஆக்கிரமிப்பாளர்கள் முதல் ஒரு காலியான வீடு அல்லது காரைத் திருட நினைக்கும் திருடர்கள் வரை பலரும் இதில் அடக்கம். தவறான வகையில் கவனத்தைப் பெறும் வகையில் உங்கள் புகைப்படங்கள் இல்லாதாவாறு அல்லது உங்களை யாரேனும் கண்டறியாதவாறு பார்த்துக்கொள்ள உங்களுக்கான சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன, ஆன்லைனில் புகைப்படங்களை வெளியிடும் முன்பு நீங்கள் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

* டிஜிட்டல் கேமராக்கள் மூன்றாம் தரப்பு புகைப்பட மென்பொருளானது ஒவ்வொரு புகைப்படக் கோப்பின் ஒரு பகுதியாக மெட்டாடேட்டா (புகைப்படக் கோப்பின் ஒரு பகுதியாக சேமிக்கப்படும் ஒரு புகைப்படத்தைப் பற்றிய தகவல். புகைப்படம் யாரால், எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை இது கொண்டிருக்கக்கூடும். மெட்டாடேட்டா என்பது எப்போதும் அணுகுவதற்கு எளிதாக இருக்காது, அத்துடன் ஒரு புகைப்படக் கோப்பின் பகுதியாக எந்தளவு மெட்டாடேட்டா சேமிக்கப்பட்டது என்பதை எளிதாகக் கண்டறிய இயலாது.) ஐ சேமிக்கக்கூடும். சேமிக்கப்படும் மெட்டா டேட்டாவானது கேமரா தயாரிப்பாளர் மற்றும் மென்பொருள் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாறக்கூடும், ஆனால் உங்கள் பெயர், கேமரா வரிசை எண், அல்லது புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் தொடர்பான GPS கூறுகள் போன்றவையும் சேர்க்கப்படும். நீங்கள் ஆன்லைனில் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்கள் புகைப்படத்தைப் பார்க்கும் மற்றும் பதிவிறக்கும் நபர்கள் இந்த மெட்டா டேட்டாவை அணுக முடியக்கூடும். மெட்டா டேட்டா பகிர்வை முடக்குவதைப் பற்றி அறிய புகைப்படங்களுக்கான கோப்பு விவர பகிர்தலை முடக்குதல் -ஐ காணவும்.
* உங்களைப் பற்றி புகைப்படங்கள் எதை வெளிப்படுத்துகின்றன? தவறான வகையான கவனத்தைப் பெறக்கூடுமா அல்லது உங்களை மற்றவர்கள் கண்டறிய உதவுமா?
* பின்னணியில் என்ன உள்ளது? புகைப்படங்களில் உங்கள் வீட்டு எண், தெரு அடையாளம், உரிம அட்டை, ஒரு உள்ளூர் அஞ்சல், உங்கள் பள்ளி அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா?
* முழு பெயர்கள் அல்லது பிற கண்டறியக்கூடிய தகவல்களை உங்கள் புகைப்படங்களில் லேபிள் செய்துள்ளீர்களா?
* உங்கள் சட்டையில் என்ன உள்ளது? உங்கள் பள்ளி, விளையாட்டு அணி, அல்லது கிளப்பின் பெயர் உள்ளதா? உங்கள் பெயர் இருக்கிறதா?
* புகைப்படங்களில் யாரெல்லாம் உள்ளனர்? அந்த புகைப்படத்தில் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்றால், நீங்கள் அவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்கிறீர்கள்.

--நன்றி மைக்ரோசாப்ட்

Wednesday, October 21, 2009

நானும் எழுத ஆசைப்படுகிறேன்

அத்தனைக்கும் ஆசைபடு என்பதற்கேற்ப இதோ "நானும் எழுத ஆசைப்படுகிறேன்". இங்கு வார்த்தைகளை பதிப்பதைவிட, காட்சிகளாய் விதைக்க விரும்புகிறேன்.

இந்த சிறிய முயற்சிக்கு கருவாய் இருக்கும் PIT வலைத்தளத்திற்கு நன்றி தெரிவிப்பதுடன் இதோ, என் முதல் பதிவை PIT குழுவிற்கு அர்ப்பணித்து என் பயணத்தை துவங்குகின்றேன்.