Wednesday, April 7, 2010

முதல் முறை சிலிர்க்கிறேன்


 ஆனதென்ன
ஆவதென்ன
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன சொல்வதென்ன
உன்னிடம் கேட்டு நின்றேன்
உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல் இதுவோ

ஏதுமில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க
யாருமில்லா என் மனதில் சாரலும் அடிக்க
நேற்று காதல் இல்லை
என் நெஞ்சில் நீயும் இல்லை
இன்று ஏன் மாறினேன்
காதல் இதுவோ
பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னை வெல்கிறாய்

எல்லை இல்லா வானம் என்று
என்னை நினைத்திருந்தேன்
உள்ளம் கையால் மூடி கொண்டாய்
மிச்சம் இன்றி கரைந்தேன்
என்னை நீ வாங்கினாய்
எனக்கு தெரியாமலே
உன்னில் நான் மூழ்கினேன்
காதல் இதுவோ.

ஒவ்வொரு முறையும் சிலிர்க்கின்றேன், இப்பாடலை கேட்கும்பொழுது.


The Blind SideThe Short Second Life of Bree Tanner: An Eclipse NovellaSoldier of Love

Thursday, March 25, 2010

கல்மரங்கள்


                 திருவக்கரை. புதுச்சேரிக்கு மிக அருகிலுள்ள தமிழகப் பகுதியான திருவக்கரை பழைமையிலும் பழைமை வாய்ந்த ஊராகும். இங்கு இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்கள்  கல்மரங்களாக காட்சியளிக்கின்றன. இவைகளை படிவப் பாறை மரங்கள் (Fossilized Trees)என்று ஆய்வாளர்கள் அழைகின்றனர்.

இந்திய புவியல் இலாக்கா திருவக்கரை கல்மரங்களை தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது. ஆனாலும் இம்மரங்களுக்கு முறையான பராமரிப்பு இல்லை. பூங்காவிலும், பூங்காவைச் சுற்றியும் ஒரே முட் புதர்கள். அங்கு கானவரும் சுற்றுலா பயணிகளுக்கு பூங்கவைப்பற்றி தெரிந்துகொள்ள முறையான  அறிவிப்பு பலகைகளோ, தேவையான வழிகாட்டுதலுகளோ இல்லை.

உங்கள் பார்வைக்கு சில படங்கள்....Tuesday, March 23, 2010

காதோரம் லோலாக்கு

        

          ஒரு நாள் மாலை நேரம், நண்பர் திரு.ஜித்தன்(எ)விக்னேஷ் என்பவருடன் ஹெய்தையில் உள்ள ஷில்பாராமம் (மாதிரி கலைக் கிராமம்) என்னும் இடத்திற்குச் சென்றோம். எங்கள் இருவருக்கும் "Photography"யில் ஆர்வக்கோளாறு அதிகம். அன்று மட்டும் சுட்டுத் தள்ளிய புகைப்படங்களின் எண்ணிக்கை அரை ஜீபிக்கு(.5 gb) மேல். அனைத்து புகைப்படங்களும் மிகவும் அருமையாகவும், மனதை கவரும்படியாக இருந்தது. இதில் ஒரு புகைப்படம் மட்டும் பாட்டுபட வைத்தது. உங்களுக்காக அப்புகைப்படமும்.....


  என் மனதில் இசைத்தப் பாடலும்...பாடல் வரிகள்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்             (காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்                                                       (நான் விரும்பும்..)

வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்                                          (காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு                                                           (வானவில்லை..)

என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்                                                 (காதோரம்..)

 The Big Short: Inside the Doomsday Machine    The Twilight Saga: New Moon (Two-Disc Special Edition)  Kindle Wireless Reading Device (6" Display, Global Wireless, Latest Generation)
Friday, March 19, 2010

கவுண்டருக்கு அட்டாக்

          தமிழ் சினிமா உலகில் கொடிக்கட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களில், மிக பிரபலமானவர் கவுண்டமணி. தனக்கென ஒரு வழிப் பிடித்து அதில் தனி முத்திரை பதித்தவர்.73 வயதான அவருக்கு, சர்க்கரை நோய் இருந்து வந்தது.

கடந்த சில நாட்களாக தோள் பட்டையிலும், கழுத்திலும் வலி இருந்து வந்தது கவுண்டமணிக்கு, கடந்த 15ம் தேதி,  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுண்டமணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று ( 18-ந்தேதி, வியாழகிழமை)  அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தார்கள்.

அதன்படி அவருக்கு, இன்று ( 19-ந்தேதி,வெள்ளிக்கிழமை) இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் உடல்நலம் பெற வேண்டி, ஒரு ரசிகனாய் இந்த பதிவு சமர்ப்பணம்.

அவருடைய "All Time" நகைச்சுவை உங்களுக்காக...


Thursday, March 18, 2010

யாதுமாகி


திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தித் துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம்மொன்று  தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை - மௌனமாகிறேன்
காதல் எந்தன்வாசல்  வந்ததும்
காலம்,நேரம் மாறிப் போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்கச்  சொல்லிவேண்டுதே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தித்  துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம்மொன்று  தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை - மௌனமாகிறேன்
காதல் எந்தன்வாசல்  வந்ததும்
காலம்,நேரம் மாறிப் போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை  கண்டதும்
மீண்டும் பார்க்கச்  சொல்லிவேண்டுதே

யாரை  பார்த்து பேசும்போதும்
உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட  வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும்போது  
நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணாமுச்சி ஆட்டம் ஆடினால்
கண்ணைமுடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டம்புச்சி கையில் வந்ததே - என்னன்பே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே

காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலைவரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடர்வேனே
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன் 
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமிமுழுதும் போகவேண்டுமே
யாதுமாகி என்னுள் வந்து என்னையாழ்கிறாய்
மாயமாக மனதை எதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன் - என்னன்பே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம்மொன்று  தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை - மௌனமாகிறேன்
காதல் எந்தன்வாசல்  வந்ததும்
காலம்,நேரம் மாறிப் போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை  கண்டதும்
மீண்டும் பார்க்கச்  சொல்லிவேண்டுதே


பாடல் துவங்கியதும் மனம் மெல்ல துடித்து, வெளிய காற்றில் கரைந்து, வானில் வட்டமிட்டு முடியும் தருவாயில் மண்ணை முத்தமிட்டு, மனதோடு மனம் சேர்ந்தப் பின் மீண்டும் கேட்கத்  துடிக்கின்றது மனது.

Friday, January 22, 2010

என் குரலை நெரித்த "கூறல்"

        பல மாதங்கள் கழித்து விடுமுறை. பொங்கலுக்காக. வீட்டிற்குச் சென்றேன். வழக்கம்போல் உண்டேன், உறங்கினேன் வேறென்ன கண்டேன். சில மாற்றம். அம்மாவழி தாத்தாவிடம். 95 வயதானவர். மூப்பின் காரணமாக காதுகேட்கும் திறன் முன்பே குறைந்திருந்தது. ஆனாலும் காலை 6  மணி முதல் 9  மணி வரை செய்திதாளில் வரி விளம்பரத்தை கூட விட்டு வைக்காத வாலிப வாசகன். கிரிகெட்டின் தீவிர ரசிகன். வீட்டுக்கு வருபவர்களின் உதட்டசைவை  வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்.  இப்படி கலகலவென இருந்தவர் தன் இருகை இடுக்கில்  சந்தோஷத்தை மறைத்து மௌனம் காத்தார். ஒபாமா முதல் ஊரில் ஓடிப்போன ஜோடிகள் வரை பேசும் உதடுகளின் மௌனம் என்னை ஏனோ செய்தது. அம்மாவிடம் விசாரித்ததில் மூப்பு அவரது பார்வையை மங்கச்செய்தபோது சத்தம் நழுவி, உதட்டசைவும் நழுவி யார் வந்திருக்கிறார்கள்  என்பதை உள்ளங்கையில் விரலால் எழுதியோ, அல்லது அவர்களை தொட்டு பார்த்தோதான் தெரிந்துகொள்கிறார்  என்பதை அறிந்தேன். விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்புமுன் அவரின் நடுங்கும் கரம் பற்றி உள்ளங்கையில் என் விரலால் ஆசிர்வதிக்குமாறு எழுதிவிட்டு அவரின் காலில் விழுந்து வணங்கி எழுந்து கண்டேன். "அவர்  கண்களில் கண்ணீர்". அன்று அர்த்தம் புரியவில்லை எனக்கு .....             ஒருவார விடுமுறைக்கு பின் ஹய்தை நண்பர்களின் சந்திப்பு, சிந்திப்பு, சிரிப்பு, பூரிப்பு. எல்லாம் நடந்தேறி முடியும் தருவாயில் நண்பர் ஒருவர் (ஒரு வேலை மணிகுமாரோ!!!)  தன் மருத்துவ குறிபேடுகளின் நடுவில்  பொதித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை வாசிக்க தந்தார். அதில் திரு.வண்ணதாசன் அவர்கள் எழுதிருந்த "கூறல்" என்ற கதை என் குரலை நெரித்து. என் குருதியில் உறைந்திருந்த தாத்தாவின் கண்ணீருக்கான அர்த்தம் உணர்ந்தேன்.

"தாத்தா தனக்கான பாஷைய தன் பிடியைவிட்டு நழுவிச் செல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு வழியில் அதை கட்டிபோட்டு வைத்திருந்தார். ஆனால் பேச்சை அறிந்துகொள்ள முடியாமல் போவது தன் இருப்பை அர்த்தமற்று போகச் செய்கிறது என்ற உண்மையை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை."

மேலே திரு.வண்ணதாசன் அவர்கள் விதைத்த வரிகள் என்னையும் உணரச் செய்தது. அவரின்(என் தாத்தா) கண்ணீர் சொல் நழுவி, தொடுதல் மட்டுமே சாத்தியமான மூப்பின் அரிய காட்சி அது. அவரின் மௌனம் அதற்க்கான சாட்சியாய் விளங்கியது. என் அறியாமை என்னும் இருளில் விட்டெறிந்த ஒளிகற்றை அந்த வைரவரிகள். மீண்டும் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளேன் வீட்டிற்கு செல்ல. மீண்டும் அவர் கரம் பற்றி அவரின் இருப்பை தொடுதலின்முலம் வியக்க.