நாசி கடந்த கரியமில வாயு
பெரும் சத்ததுடன் பெரும்மூச்சாய்
மூக்கின்வழியே கடக்க
மனதின் மதிலோரம்
படிந்திருந்த நினைவுகளின் ஒட்டடைகளையும்
காற்றிலே தவனை முறையில் கறைக்குதே
காற்றிலே கலந்துவிட்ட
நினைவுகளை நூல்பிடித்து பறந்தாள்
புதைந்திருக்கும் ரகசியத்தின் கள்ளச்சாவி கிட்டும்
மீண்டும் பெரும்மூச்சு கலக்கும் பிரிதொருநாளில்
மெதுவாய் திற கள்ளச்சாவியுடன்
புதைந்திருக்கும் பெரும் ரகசியத்தை
உடைந்த இதயத்தின் சத்தம்
தவனைமுறையில் கேட்கும்
சத்தமில்லாமல்.





