Thursday, October 22, 2009

இனிதே ஆரம்பம்




சேலம் விமான நிலையத்தில் இதுவரை விமான சேவை இல்லாமல் இருந்து வந்தது.  வருகிற அக்டோபர் மாதம் முதல் விமான சேவை இனிதே துவங்குகிறது சேலம் விமான நிலையம். இதன் அதிகாரபுர்வ அறிவிப்பை Airports Authority of India (AAI) வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கிங்பிஷர் நிறுவனம் சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை தொடங்குகிறது. வருகிற 25ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. இதற்கான இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது.

முதல் விமான சேவை வரும் 25ம் தேதி சென்னையில் இருந்து  மதியம் 2.50 க்கு தொடங்கி ஒரு மணிநேர பயணமாக சேலம் வந்தடையும். மீண்டும் மாலை 4.20 சென்னையை நோக்கி தனது முதல் விமான சேவையை  சேலம் விமான நிலையம் தொடங்குகிறது.

சேலம் - சென்னை இடையிலான விமானக் கட்டணமாக ரூ. 2,877 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கட்டணத்தை குறைத்தால் கூடுதல் பயணிகளைக் கவர முடியும் என சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்முலம் ஆறு மாவட்டங்களாகிய தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.